இட்லி
நம் உடலின் ஆரோக்கியமே உள்ளத்தின் ஆரோக்கியம். நாம் ஆரோக்கியமாக வாழ நல்ல உணவு பழக்கவழக்கம் முக்கியமானது. நாம் உண்ணும் உணவு சுவையாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும். சுவையும் ஆரோக்கியமும் சேர்த்த உணவுகளில் தென்னிந்திய உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய சுவையும் ஆரோக்கியமும் சேர்த்த உணவுகளில் ஒன்று தான் இட்லி.
இட்லி, தமிழர்களின் பாரம்பரிய உணவு. சுவையும், ஆரோக்கியமும் சேர்ந்த எளிமையான உணவு
உங்கள் காலை உணவை சற்று ஆரோக்கியமாக மாற்ற உணவு பட்டியலில் நிச்சயம் இட்லியை சேர்த்து கொள்ளுங்கள்
ஆரோக்கிய நன்மைகள்
அரிசி, உளுந்து ஆகியவை இட்லியின் முக்கிய பொருட்கள். இது எந்த எண்ணெயும் சேர்க்கப்படாத உணவு என்பதால் ஆரோக்கியத்திற்கு முதல் இடம்.மேலும்,அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்டுள்ளது..
இட்லியில் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இல்லை. குறைவான நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பை உட்கொள்வது உங்கள் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இட்லியில் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், என்சைம்கள், கொழுப்புகள், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
மேலும், இது எந்த நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலெஸ்ட்ரால்களை கொண்டிருக்கவில்லை, காலை உணவாக நாம் உட்கொள்ளும் இட்லி நமது உடலில் மிக எளிதிக செரிக்கப்படுகிறது.
இது குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளைக், குறிப்பிடத்தக்க அளவு புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைத்த உணவு. ஆரோக்கியமான பெரியவர்களுக்கு தினமும் 60 கிராம் புரதமும் 250 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும் தேவைப்படுகின்றன. புரதம் தசையை வலுவாக்க உதவுகிறது, அதே போல் கார்போஹைட்ரேட்டுகளும் ஆற்றலை வழங்குகின்றன. ஃபைபர் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது ஆண்களுக்கு நார்ச்சத்து தினசரி தேவை 30 முதல் 35 கிராம் வரை நார்ச்சத்து மற்றும் பெண்களுக்கு 24 முதல் 30 கிராம் வரை இருக்கும்.
இட்லியுடன் நாம் சேர்த்து உண்ணும் தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் உணவுக்கு மேலும் சுவையையும் ஆரோக்யத்தையும் கூட்டுகிறது . இது வழக்கமாக சில புரதங்களுடன் வைட்டமின் சி கொண்டுள்ளது.
இத்தகைய சுவையான நம் தமிழர்களின் பாரம்பரிய உணவை எடுத்து கொண்டு ஆரோக்யமாக வாழ்வோம் .
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.